யாழில் சிறையில் இருந்த கைதி திடீர் மரணம்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை தகவல் தெரிவித்தன.

அம்மன் கோவில் வீதி உடுவில் பகுதியைச் சேர்ந்த யோகராசா ஜெயக்குமார் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மதுபோதையில் குடும்பத் தகராறில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இவர் சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, கடந்த 24ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் நேற்று சுகவீனம் காரணமாக சிறைச்சாலை அதிகாரிகளினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், காலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Previous articleவவுனியாவில் பிரபல ஆடைத்தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியில் டயர் எரிப்பு!
Next articleமன்னாரில் இருந்து தமிழகம் தப்பிச்செல்ல முயன்ற 12 பேர் கைது