திடீர் சுகவீனம் காரணமாக மருத்துவனையில் அனுமதித்த அமைச்சருக்கு சிகிச்சையளிக்க மறுத்த மருத்துவர்

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க திடீர் சுகவீனம் காரணமாக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற சென்ற போது, அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டதாக தெரியவருகிறது.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு சிகிச்சையளிக்க முடியாது என மருத்துவர் ஒருவர் மறுத்ததை அடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து நிலைமையை சமாளிக்க அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்ததாக மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் லங்கா தனியார் மருத்துவமனையில் நடந்ததாக கூறப்படுகிறது.

Previous articleபாம்பு தீண்டியதால் வயல் காவலில் இருந்த முதியர் பலி
Next articleதொடர்ந்து 15 மணிநேரம் மின்வெட்டு : ஏற்படப்போகும் அபாயம்