தொடர்ந்து 15 மணிநேரம் மின்வெட்டு : ஏற்படப்போகும் அபாயம்

எதிர்காலத்தில் 15 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் அலி சப்ரி அமைச்சரவையில் இதனை தெரிவித்துள்ளார்.

அந்நியச் செலாவணி இல்லாத பொருளாதார நெருக்கடி மோசமாகி விட்டதாகவும், அந்நியச் செலாவணிக் கையிருப்பு 50 மில்லியன் டொலருக்கும் குறைவாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

எதிர்காலத்தில் எரிபொருள் இருப்புகளை இறக்குமதி செய்வது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும், அதற்கமைய மின்சார விநியோகம் பாரிய நெருக்கடியாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கு முதலில் நாட்டில் நிலையான அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் அமைச்சரவையில் சுட்டிக்காட்டினார்.

Previous articleதிடீர் சுகவீனம் காரணமாக மருத்துவனையில் அனுமதித்த அமைச்சருக்கு சிகிச்சையளிக்க மறுத்த மருத்துவர்
Next articleதனது உண்டியலில் சேகரித்த பணத்தை இலங்கை மக்களுக்காக வழங்கிய தமிழக சிறுமி