யாழில் இருந்து இந்தியா செல்ல முயன்ற பெண்கள்: கடலில் ஒரு சுற்றுசுற்றிவிட்டு இலங்கை கரையிலேயே இறக்கி விட்ட ஏமாற்று மாலுமிகள்: 12 பேர் கைது!

மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு படகில் கை குழந்தையுடன் சென்ற இளம் குடும்பம் உட்பட 12 பேரை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இன்று சனிக்கிழமை (4) அதிகாலை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மன்னார் மடு தேக்கம் பகுதியை சேர்ந்த பத்து மாத கைக்குழந்தையுடன் இளம் குடும்பம் ஒன்றும், பேசாலை பகுதியை சேர்ந்த 7 நபர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

யாழ்பாணத்தை சேர்ந்த இரு பெண்கள் சட்டவிரோதமாக படகில் இந்தியா செல்ல முற்பட்டனர். அவர்களை படகோட்டிகள் ஏமாற்றி, இந்தியா என குறிப்பிட்டு இலங்கைக்கு சொந்தமான தீடை பகுதியில் இறக்கி விடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 12 பேரூம் இன்று சனிக்கிழமை (08) காலை 9 மணியளவில் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி A.H.ஹைபதுல்லா முன்னிலையில் மதியம் 3 மணியளவில் ஆஜர்படுத்தப்பட்டனர்

வழக்கை விசாரித்த நீதவான் நீதிமன்ற நீதிபதி A.H ஹைபதுல்லா இரு சிறுவர்களையும் பொற்றோரிடம் ஒப்படைக்குமாறும் ஏனைய 10 பேரையும் சுமார் ஐம்பதாயிரம் ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்

Previous articleநான்காவது கொரோனா தடுப்பூசி நடவடிக்கை திங்கள் முதல் ஆரம்பம்
Next articleயாழில் இந்தியத் துணைத் தூதுவரை மறித்த இராணுவத் தளபதி : நேர்ந்த நிலை