யாழில் இந்தியத் துணைத் தூதுவரை மறித்த இராணுவத் தளபதி : நேர்ந்த நிலை

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆளுகைக்கு உட்பட்ட 3 தீவுகளிற்குச் செல்வதற்காக யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதுவர் கடற்படையினரிடம் விண்ணப்பித்துள்ளனர்.

இதேவேளை, அதற்கான பயண ஏற்பாடுகளை மேற்கொள்வதாயின் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற்றுவருமாறு யாழ்.மாவட்ட கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சிற்கு விண்ணப்பித்து அங்கிருந்து கிடைத்த அனுமதியை கடற்படையினரிடம் சமர்ப்பித்தே இந்தியத் தூதர் 3 தீவிகளிற்கும் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சாதாரண சுற்றுலாப் பயணிகளே சென்றுவரும் இடத்திற்கு எம்மிடம் பாதுகாப்பு அமைச்சு அனுமதி கோரியிருக்க கூடாது இந்தியத் துணைத் தூதுவர் தமது அதிருப்தியை இலங்கை பாதுகாப்பு அமைச்சிற்கு தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

Previous articleயாழில் இருந்து இந்தியா செல்ல முயன்ற பெண்கள்: கடலில் ஒரு சுற்றுசுற்றிவிட்டு இலங்கை கரையிலேயே இறக்கி விட்ட ஏமாற்று மாலுமிகள்: 12 பேர் கைது!
Next articleயாழ் சாவகச்சேரியில் பூசகரிடமிருந்து பணம் பறிப்பு