நாளை மின்வெட்டு குறித்து வெளியான முக்கிய தகவல்!

நாளை மூன்று மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, A முதல் L மற்றும் P முதல் w வரையான வலயங்களிலும், காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் 2 மணிநேரமும், மாலை 5 மணிமுதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணி நேரமும் 20 நிமிடங்களும் மின் துண்டிக்கப்படவுள்ளது.

அதேநேரம், கொழும்பு முன்னுரிமை வலயங்களில் காலை 6 மணி முதல் 9 மணிவரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது.

இதுதவிர, M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களில் அதிகாலை 5 மணிமுதல் காலை 8 மணிவரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலங்கள் மின் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.