முன்னாள் அமைச்சர் சனத் நிஷாந்தவின் வீட்டுக்கு தீ வைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சனத் நிஷாந்தவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

புத்தளம் ஆராச்சிக்கட்டு பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டுக்கே இவ்வாறு தீவைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் சனத் நிஷாந்த, அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் கலந்துக்கொண்டார். அத்துடன் சனத் நிஷாந்த, மைனா கோ கம மற்றும் கோட்டா கோ கம ஆகிய இடங்களில் போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்திய ஆளும் கட்சியினருடன் சென்றிருந்த அமைச்சர்களில் ஒருவர்.

அதேவேளை குருணாகலில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்துடன் குருணாகல் மாநகர மேயர் வீட்டின் மீது போராட்டகாரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனிடையே முன்னாள் ராஜாங்க அமைச்சர் நிமல் லங்சாவின் நீர் கொழும்பில் உள்ள வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
.

Previous articleமகிந்த ராஜபக்சவின் இல்லத்திற்கு தீ வைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்
Next articleதன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்