தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்நறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள நிட்டம்புவை பிரதேசத்தில் தனது கைத் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

நிட்டம்புவை நகரில் இன்று இன்று காலை நடந்த அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் மீது நாடாளுமன்ற உறுப்பினர் தனது கைத் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதனையடுத்து ஆத்திரமடைந்த சிலர், அவரது வாகனத்திற்கும் அவர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர்.

இதனையடுத்து தனது கைத் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாகவும் அவரது சாரதி எனக் கூறப்படும் நபர் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக கூறபடுகிறது.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து ஆத்திரமடைந்த மக்கள், நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை தாக்கி, வாகனத்தை நடு வீதியில் கவிழ்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

Previous articleமுன்னாள் அமைச்சர் சனத் நிஷாந்தவின் வீட்டுக்கு தீ வைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்
Next articleஆர்ப்பாட்டக்காரர்களால் மகிந்தவின் ஆதரவாளருக்கு வழங்கப்பட்ட தண்டனை