யாழில் அங்கஜன் இராமநாதனின் அலுவலகத்திற்கு தீயை மூட்டி உடனடியாக அனைத்த சந்தேக நபர்கள்

யாழ்ப்பாணத்திலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அலுவலக பெயர்ப்பலகைக்கு யாரே தீமூட்டி புகைப்படம் எடுத்து விட்டு, உடனடியாக அணைத்துள்ளனர்.

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின், சண்டிலிப்பாய் அலுவலகத்தின் வெளிப்பகுதியில் பிரதேச மக்கள் தீமூட்டியுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.

இதையடுத்து, பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது, எந்த அசம்பாவிதமும் தென்படவில்லை.

அலுவலகத்தில் யாரும் தங்கியிராத நிலையில், அலுவலக விளம்பர பலகை தீ மூட்டப்பட்டு, உடனடியாக அணைக்கப்பட்டு காணப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் செய்தி பரப்ப யாராவது தீமூட்டி, புகைப்படம் எடுத்த பின் அணைத்தார்களா அல்லது அவர்கள் புகைப்படம் எடுத்ததும் அது அணைந்து விட்டதா என்பது தெரியவில்லை.

Previous articleகொழும்பு – அங்கொடைப் பகுதியில் இராணுவத்திரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் : வௌியான காணொளி
Next articleமட்டக்களப்பில் இடம்பெற்ற பதற்றத்தால் பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்