மஹிந்த ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிச் செல்லமாட்டார் : நாமல் ராஜபக்ச

அவர் சர்வதேச ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்தே விலகியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகமாட்டார் எனத் தெரிவித்துள்ளார் நாமல்.

இன்று காலை அதிபாதுகாப்புடன் அலரிமாளிகையிலிருந்து வெளியேறிய மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினர் திருகோணமலை கடற்படைத் தளத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அந்த முகாமுக்கு முன்பாக மக்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை மைன கோ கம மற்­றும் கோத்தா கோ கம போராட்­டங்­க­ளைக் குழப்பி, தாக்­கு­தலை நடாத்­தத் திட்­ட­மிட்ட முன்­னாள் பிர­த­மர் மஹிந்த ராஜ­பக்­சவை, உட­ன­டி­யா­கக் கைது செய்ய வேண்டும் என சட்­டத்­த­ர­ணி­கள் பொலிஸ் மா அதி­ப­ரி­டம் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

Previous articleமட்டக்களப்பில் இடம்பெற்ற பதற்றத்தால் பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்
Next articleநாடளவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!