யாழில் கொன்று புதைக்கப்பட்ட நபரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் ஆண் ஒருவரது உடலம் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் இருப்பதாக நேற்று பொலிஸார் தெரிவித்து குறித்த பகுதியை முற்றுகையிட்டு விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த இடத்திற்கு இன்று(11) வருகை தந்த மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

குறித்த பகுதிக்கு வருகை தந்த நீதவான் நீதிமன்ற நீதிபதி ஸ்மையில் ஜெமில் தலைமையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

இதில் இராசன் சிவஞானம் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையின் சடலமே புதைக்கப்பட்டிருப்பது அடையாளப்படுத்தப்பட்டது.

இது குடும்ப தகராறு காரணமாக இடம்பெற்றிருக்காலம் என சந்தேகிக்கப்படுவதாக மருதங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous articleக.பொ.த சாதாரணதர பரீட்சைகள் ஒத்திவைப்பு! தொடர்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை வெளியான அறிவிப்பு!
Next articleபுதிய பிரதமராக பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்க !