புதிய பிரதமராக பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்க !புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி சமூக மற்றும் அரசியல் மட்டத்தில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில் கடந்த திங்கட் கிழமை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து பிரதமர் பதவிக்கு நியமிக்க பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தனஇந்தநிலையில் நேற்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

அதன் பின்னர் அவர் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றி புதிய பிரதமரையும், அதனைத் தொடர்ந்து புதிய அமைச்சரவை ஒன்றையும் நியமிப்பது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே தற்போது புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

புதிய பிரதமராக பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்க !
Previous articleயாழில் கொன்று புதைக்கப்பட்ட நபரின் சடலம் மீட்பு
Next articleமீண்டும் ஊரடங்கு! தளர்த்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.