யாழில் அங்கஜன் இராமநாதனின் அலுவலகத்திற்கு தீ வைத்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் சண்டிலிப்பாய் தொகுதி அலுவலக பதாகைக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் ஒருவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு சுழிபுரத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் சண்டிலிப்பாய் தொகுதி அலுவலகத்தின் முன் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாகை நேற்று முன்தினம் இரவு தீவைக்கப்பட்டது.

Previous articleமீண்டும் ஊரடங்கு! தளர்த்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
Next articleமேல் மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை : வெளியான அறிவிப்பு