மேல் மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை : வெளியான அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் காரணமாக மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை (13) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண கல்வி பணிப்பாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு பின்னர் மீண்டும் 2 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் போக்குவரத்து நிலையை கருத்தில்கொண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleயாழில் அங்கஜன் இராமநாதனின் அலுவலகத்திற்கு தீ வைத்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது!
Next articleஅம்பாறையில் கடலில் காணாமல் போன இரு இளைஞர்களின் சடலம் மீட்பு