அம்பாறையில் கடலில் காணாமல் போன இரு இளைஞர்களின் சடலம் மீட்பு

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பகுதியில் நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருக்கும் வேளையில்
கடலின் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இரு மாணவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது,

மருதமுனை பகுதியைச் சேர்ந்த முகமது பைரூஸ், வசீம் ஜெசீத் மற்றும் உபைத்துல்லாஹ் அத்தீஸ் அகமட் எனும் தேசிய பாடசாலை மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த (10)ம் திகதி மாலை 5.30 மணியளவில் மூன்று பாடசாலை மாணவர்கள் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானதுடன் அதில் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அன்றைய தினம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து காணாமல் போன இரு மாணவர்களின் சடலங்கள் நேற்றைய தினம்(11) மாலை பொதுமக்களால் மீட்கப்பட்டு மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் பொலிஸாரால் கையளிக்கப்பட்டது.

Previous articleமேல் மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை : வெளியான அறிவிப்பு
Next articleநாட்டு மக்களுக்கு வன்முறைத் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்