முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச வெளிநாடு செல்ல தடை!

இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே வெளிநாடு செல்ல அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியை கண்டித்து காலிமுகத்திடலில் அமைதியாக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இந்த சம்பவத்திற்காக பிரதமர் பதவியில் இருந்து விலகிய மகிந்த ராஜபக்சே, முன்னாள் அமைச்சர்கள் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் சங்கத்தினர் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த கொழும்பு கோட்டை நீதிமன்றம் மகிந்த ராஜபக்சே, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் வெளிநாடு செல்ல தடை விதிப்பதாக கூறியுள்ளது.