பரீட்சைக்கு தயாராகி வந்த மாணவன் ஆன்லைன் விளையாட்டில் தோல்வியுற்றதால் தற்கொலை

தருமபுரி அருகே, ஆன்லைன் கேமில் பணத்தை இழந்ததால் எலி பேஸ்டை சாப்பிட்ட மாணவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குரும்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் +2 முடித்து 3 ஆண்டுகளாக நீட் தேர்வுக்குத் தயாராகி வந்துள்ளார். ஆன்லைன் நீட் வகுப்புகளுக்காகத் தந்தை வாங்கி கொடுத்த செல்போனில், வெங்கடேஷ் RXCE என்ற ஆன்லைன் கேமை பணம் கட்டி விளையாடத் தொடங்கினார்.

வீட்டில் இருந்த நகைகளை அடமானம் வைத்து பெற்ற 50,000 ரூபாயையும் அவர் ஆன்லைன் கேமில் இழந்துள்ளார். இதனால் விரக்தியில் கடந்த சனிக்கிழமை வெங்கடேஷ் எலி பேஸ்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தருமபுரி அரசு மருத்துவமனையில் 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு அவர் உயிரிழந்தார்.

Previous articleமுன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச வெளிநாடு செல்ல தடை!
Next articleகணவரை கொலை செய்துவிட்டு மகனுடன் சேர்ந்து தீக்குளித்து நாடகமாடிய மனைவி