கணவரை கொலை செய்துவிட்டு மகனுடன் சேர்ந்து தீக்குளித்து நாடகமாடிய மனைவி

சீர்காழி அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவனை சுத்தியலால் அடித்து கொன்று விட்டு, தற்கொலை செய்ததாக நாடகமாடிய மனைவி மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.

சக்திவேல் என்பவர் மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு தினமும் குடிபோதையில் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சக்திவேல், அறை கதவை பூட்டிக்கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாக மனைவியும், மகனும் அக்கம்பக்கத்தினரிடம் கூறியுள்ளனர்.

சக்திவேலின் மரணத்தில் கிராம நிர்வாக அலுவலகர் சந்தேகம் எழுப்பியதால், எரியூட்டும் தருவாயில் போலீசார் உடலை கைப்பற்றினர்.

விசாரணையில், குடிபோதையில் தகராறு செய்த சக்திவேலை மனைவி வசந்தா சுத்தியலால் தலையில் அடித்து கொன்று விட்டு, மகனுடன் சேர்ந்து உடலை எரித்து விட்டு, தீக்குளித்து தற்கொலை செய்ததாக நாடகமாடியது தெரியவந்தது.

Previous articleபரீட்சைக்கு தயாராகி வந்த மாணவன் ஆன்லைன் விளையாட்டில் தோல்வியுற்றதால் தற்கொலை
Next articleபெற்ற மகளை பாலியல் ரீதியில் கொடுமைப்படுத்திய தந்தை : வீடியோ எடுத்து உதவி கேட்ட 18 வயது பெண்!!