யாழில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது !யாழில் பெருமளவு போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மல்லாகத்தைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே இன்று முற்பகல் தெல்லிப்பழை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதன்போது அவரிடமிருந்து 300 போதை மாத்திரைகள் மற்றும் 2 கிராம் ஹெரோயின் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Previous articleதனது தாத்தாவை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற பேரன்!
Next articleநாளை மின்வெட்டுத்தொடர்பில் வெளியான தகவல்