ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டின் அசாதரனமான சூழ்நிலையின் காரமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவானது நாளை காலை 06 மணியுடன் தளர்த்தப்பட்டு மாலை 05 மணிக்கு பிறப்பிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாளை மாலை 6 மணி முதல் நாளை மறுதினம் (15) காலை 5 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியினால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின்றி பொது வீதி, புகையிரத பாதை, பொது பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் எவரும் தங்குவதற்கு மற்றும் நடமாடுவதற்கு அனுமதி இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous articleநாளை மின்வெட்டுத்தொடர்பில் வெளியான தகவல்
Next articleநாட்டில் எதனால் மின்வெட்டு அமுலாக்கப்படுகிறது ? : மக்களுக்கு விளக்கம் அளித்த மின்சார சபை!