அதிகரித்தது அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி!

இலங்கை மத்திய வங்கி இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அறிவித்தலின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 364.98 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இது நேற்றைய விலையில் இருந்து 12.51 ரூபாய் குறைவாகும் என்பதுடன் நேற்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை விலை 377.49 ரூபாவாக பதிவாகியிருந்தது.

இதேவேளை, அவுஸ்திரேலியா மற்றும் கனேடிய டொலர்கள், யூரோ மற்றும் ஸ்டெர்லிங் பவுண்டுகளுக்கு நிகரான ரூபாவின் பெறுமதியும் உயர்வடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதேவேளை, அரச அங்கீகாரம் பெற்ற வர்த்தக வங்கிகளில் இன்றைய தினம் ஒரு டொலர் 365 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்கும் நிலையில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி கடந்த நாட்களில் கடுமையான வீழ்ச்சியை சந்திந்திருந்தது.

இந்த நிலையில் நேற்றைய தினம் இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில் ரூபாவின் பெறுமதியில் இன்று வளர்ச்சி நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.