வவுனியா ஓமந்தை பகுதியில் ஆடைத்தொழிற்சாலை பேரூந்து மீது கல்வீச்சு தாக்குதல்!!

வவுனியா ஓமந்தை பறண்நட்டகல் பகுதியில் ஆடைத்தொழிற்சாலை பேரூந்து மீது இனந்தெரியாத நபர்களினால் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா நகரிலிருந்து ஓமந்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த குறித்த பேரூந்து மீது பறண்நட்டகல் பகுதியில் இனந்தெரியாத நபர்கள் கல்வீசி தாக்குதல் மேற்கொண்டு அவ்விடத்திலிருந்து தப்பித்துச்சென்றுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை பொலிஸார் தாக்குதலில் சேதமடைந்த பேரூந்தினை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் பேரூந்தின் கண்ணாடிகள் சில சேதமடைந்துள்ளதுடன் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

Previous articleமதுபான சாலைகள் பூட்டு! மதுவரி திணைக்களம் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
Next articleபல ஆண்டுகளுக்கு பின் திரைக்கு வந்த பிரபல இசையமைப்பாளரின் திரைப்படம்!