பல ஆண்டுகளுக்கு பின் திரைக்கு வந்த பிரபல இசையமைப்பாளரின் திரைப்படம்!

ஜிவி பிரகாஷ் நடித்த ‘ஐங்கரன்’ திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ரிலீஸ் ஆகவேண்டிய நிலையில் அவ்வப்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த வாரம் அதாவது மே 6ஆம் தேதி ரிலீஸாகும் என்று கூறப்பட்ட நிலையில் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டு மே 12ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று இந்த படம் ரிலீஸாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் நேற்று ரிலீஸ் ஆகவில்லை.

இந்த நிலையில் சற்று முன்னர் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் அனைத்து பிரச்சனைகளும் முடிந்து விட்டது என்றும், தற்போது கேடிஎம் ரிலீஸ் ஆகிவிட்டது என்றும், அனைத்து திரையரங்குகளிலும் தற்போது காட்சிகள் தொடங்கி விட்டன என்றும்,

இந்த செய்தியை அனைவரிடத்திலும் தெரிவிக்கவும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த படம் ரிலீஸ் ஆக உதவிய தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர் சங்கம் ஆகியவற்றுக்கு நன்றி என்றும் குறிப்பாக லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்திரன் அவர்களுக்கு எனது நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleவவுனியா ஓமந்தை பகுதியில் ஆடைத்தொழிற்சாலை பேரூந்து மீது கல்வீச்சு தாக்குதல்!!
Next articleபிக்பாஸ் தாமரைக்கு புதிதாக வீடு அமைத்து தரும் இசையமைப்பாளர்!