பிக்பாஸ் தாமரைக்கு புதிதாக வீடு அமைத்து தரும் இசையமைப்பாளர்!

தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஒருவரின் முயற்சியால் பிக்பாஸ் தாமரைச்செல்விக்கு சொந்த வீடு கட்டி தர முயற்சி நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

பிக்பாஸ் சீசன் 5, பிக்பாஸ் அல்டிமேட் ஆகிய நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்ற தாமரை செல்வி, தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் லட்சக்கணக்கான மக்களின் நன்மதிப்பை பெற்ற தாமரை ஏழையாக இருந்தாலும் லட்சக்கணக்கில் ரூபாய் கிடைக்கும் வாய்ப்பு இருந்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற மாட்டேன் என்று கூறியது அவர் மேல் உள்ள மரியாதை இன்னும் அதிகமாகியது.

இந்த நிலையில் தாமரைச் செல்வியின் குடும்பத்தினர் குடியிருக்க ஒரு நல்ல வீடு கூட இல்லாமல் இருப்பதை அறிந்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவருக்கு சொந்த வீடு கட்டி கொடுக்க முடிவு செய்தார். இதற்காக அவர் தாமரைச் செல்வியின் ஆதரவாளர்களை ஒன்றிணைத்து அவர்களிடம் இருந்து நிதி திரட்டி தாமரை குடும்பத்திற்கு ஒரு வீடு கட்டி கொடுக்க திட்டமிட்டுள்ளார்.

தற்போது இந்த வீட்டின் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் ’தாமரை இல்லம்’ என்ற அந்த வீட்டை தாமரை செல்வியின் குடும்பத்தினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்.

Previous articleபல ஆண்டுகளுக்கு பின் திரைக்கு வந்த பிரபல இசையமைப்பாளரின் திரைப்படம்!
Next articleசுவிஸில் ஏடிஎம் இயந்திரத்தை வெடிவைத்து தகர்த்து கொள்ளையடித்ததால் உருவாகிய பிரச்சினை