‘விக்ரம்’ படத்தில் கமலுடன் நடிக்கும் சூர்யா! வெளியானது சுவாரசியமான அப்டேட் !

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் ’விக்ரம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் ஜூன் மூன்றாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து இருப்பதாக கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் சூர்யா இந்த படத்தில் நடித்து இருப்பது உண்மைதான் என நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்தி கசிந்துள்ளது. மேலும் சூர்யா தோன்றும் காட்சியில் அர்ஜுன் தாஸ் மற்றும் ஹரிஷ் உத்தமன் ஆகியோர்களும் உடன் நடித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதுமட்டுமின்றி லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’கைதி’ திரைப்படத்தின் சில காட்சிகள் ’விக்ரம்’ படத்தின் கதை உடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் அனைத்தும் எந்த அளவுக்கு உண்மை என்பதை படம் வெளியாகும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி நாராயணன், காளிதாஸ் ஜெயராம், நரேன், அர்ஜூன் தாஸ், உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் அனிருத் இசையில், கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில், பிலோமினாராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.

Previous articleபிக்பாஸ் தாமரைக்கு புதிதாக வீடு அமைத்து தரும் இசையமைப்பாளர்!
Next articleசுவிஸில் ஏடிஎம் இயந்திரத்தை வெடிவைத்து தகர்த்து கொள்ளையடித்ததால் உருவாகிய பிரச்சினை