சுவிஸில் ஏடிஎம் இயந்திரத்தை வெடிவைத்து தகர்த்து கொள்ளையடித்ததால் உருவாகிய பிரச்சினை

சுவிஸ் மாகாணம் ஒன்றில், மர்ம நபர்கள் சிலர் ஏடிஎம் இயந்திரம் ஒன்றை வெடி வைத்துத் தகர்த்து, அதிலிருந்த பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்..

நேற்று அதிகாலை, Vaud மாகாணத்திலுள்ள ஏடிஎம் இயந்திரம் ஒன்று வெடி வைத்துத் தகர்க்கப்பட்டது. அந்த ஏடிஎம் இயந்திரத்திலிருந்த பணத்தை மர்ம நபர்கள் சிலர் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதற்கிடையில், அந்த ஏடிஎம் இயந்திரம் தகர்க்கப்பட்டதால் Concise நகர் மற்றும் Neuchâtel ஏரிக்கரையில் அமைந்துள்ள கட்டிடங்களில் மின்தடை ஏற்பட்டது.

கொள்ளையர்கள் தலைமறைவாகிவிட்ட நிலையில், பொலிசார் அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.அந்த அந்த ஏடிஎம் இயந்திரத்திலிருந்து எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

Previous articleபிக்பாஸ் தாமரைக்கு புதிதாக வீடு அமைத்து தரும் இசையமைப்பாளர்!
Next articleஇலங்கையின் ஒரு மிகப்பெரிய தீவை குத்தகைக்கு எடுத்த சுவிஸ் நிறுவனம்!