கனடாவில் பீப்பாய்க்குள் சடலமாக கிடந்த ஓரினச்சேர்க்கையாளர்!

கனடாவில் பீப்பாய்க்குள் சடலமாக கிடந்தவர் LGBTQ சமூக உறுப்பினர் என தெரியவந்துள்ளது.

Bradfordல் கடந்த மாதம் Mojtaba Shabani என்பவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். 37 வயதான Mojtaba ஓரினச்சேர்க்கையாளர் என தெரியவந்துள்ளது. LGBTQ சமூக உறுப்பினரான Mojtaba குறித்த தகவல்களை அவர் சார்ந்திருந்திருக்கும் LGBTQ உறுப்பினர்கள் முன்வந்து தெரிவிக்க பொலிசார் கோரிக்கை வைத்துள்ளனர்.

Mojtaba-ன் உடலுக்கு பிரேத பரிசோதனை நடந்த பின்னர் அது கொலை என பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

அதே நேரத்தில் அவர் எப்படி கொல்லப்பட்டார் என்ற தகவல்களை வெளியிடவில்லை. Mojtaba Durham Region, Simcoe கவுண்டி போன்ற ஒன்றாறியோவின் சில முக்கிய பகுதியில் தங்கியிருந்தார் என தெரியவந்துள்ளது.

அவரின் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ள பொலிசார் பொதுமக்களுக்கு அவர் தொடர்பில் எதாவது தகவல்கள் தெரிந்தாலும் தங்களை தொடர்பு கொள்ளலாம் என கூறியுள்ளனர்.

Previous articleகனடாவிலுள்ள வீடு ஒன்றிற்கு வருகை புரிந்த நெதர்லாந்து இளவரசி!
Next articleயாழில் பல்கலைக்கழக மாணவனின் மடிகணனியை திருடிய சந்தேக நபர்கள்!