முள்ளிவாய்க்கால் நினைவுத் தினத்தில் இடம்பெறப்போகும் தாக்குதல் – இந்திய புலனாய்வு பிரிவு தெரிவித்த தகவல்

இலங்கை பொருளாதார ரீதியில் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் ஒன்றிணைந்து தாக்குதல்களை நடத்த தயாராகி வருவதாக இந்திய புலனாய்வு பிரிவுகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தி இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தீவிரமான வன்முறைப் போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கை இரண்டு முறை அவசரகால நிலைமையை அறிவித்துள்ள நிலையில், பன்னாட்டுத் தொடர்புகளைக் கொண்ட புலம்பெயர் தமிழர்களின் ஒரு பிரிவினர், போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்து வரும் மோதல்களில் தங்கள் இருப்பை உறுதிப்படுத்த முயல்வதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவு தினமான மே 18ஆம் திகதியை சில குழுக்கள் தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அனுசரித்து தாக்குதல்களை நடத்த திட்டமிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஜன்னல் வழியாக மூன்றாவது மாடியிலிருந்து பாய்ந்த யுவதி!
Next articleமர்மமான முறையில் உயிரிழந்த 21 வயது நடிகை !