வைரமுத்து நடிகர் ராதாரவி மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு : தொடர்பில் பாடகி வெளியிட்ட கருத்து

இந்த இருவரிடம் ஒரு அறையில் தனியாக இருப்பதை விட தெரு நாய்களுடன் ஒரு அறையில் தனியாக இருப்பது பாதுகாப்பானது என பாடகி சின்மயி தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பாடகி சின்மயி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வைரமுத்து மீது திடீரென பாலியல் குற்றச்சாட்டு கூறினார் என்பதும், அதேபோல் நடிகர் ராதாரவி மீதும் தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஒரு பெண், ஆண்களை தெரு நாய்களுடன் ஒப்பிட்டு பேசிய வீடியோ வைரல் ஆகிய நிலையில் அந்த வீடியோவுக்கு பிரியாணிமேன் என்பவர் அளித்த பதிலுக்கு சின்மயி பதிலடி கொடுத்துள்ளார். இந்த நிலையில் பிரியாணிமேனை விமர்சனம் செய்த சின்மயி, ஆண்களை தெரு நாய் என்று கூறிய பெண்ணை ஏன் விமர்சனம் செய்யவில்லை என நெட்டிசன்கள் கேட்டனர்.

அதற்கு பதில் கூறிய சின்மயி, ’பொதுவாக மனிதர்களை விட நாய்கள் நம்பகமானவர்களாக இருக்கின்றார்கள் என்றும், என்னைப் பொருத்தவரை ராதாரவி மற்றும் தமிழ் கவிஞர் ஆகிய இருவருடன் ஒரு அறையில் இருப்பதை விட தெரு நாய்களுடன் பாதுகாப்பாக இருப்பேன்’ என்றும் கூறியுள்ளார். அவருடைய இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleமர்மமான முறையில் உயிரிழந்த 21 வயது நடிகை !
Next articleஆர்ஜே விக்னேஷ்காந்துக்கு திருமணம்: மணமகளுடன் எடுத்த புகைப்படம் வைரல்