ஆர்ஜே விக்னேஷ்காந்துக்கு திருமணம்: மணமகளுடன் எடுத்த புகைப்படம் வைரல்

நடிகர், ஆர்ஜே, பட்டிமன்ற பேச்சாளர், யூடியூபர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் காந்துக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் மணமகளுடன் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது .

கார்த்தி நடித்த ’தேவ்’, ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த ’மீசையை முறுக்கு’, ரியோ நடித்த ’நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் விக்னேஷ்காந்த். இவர் நடத்திவரும் யூடியூப் சேனல் பிரபலம் ஆனது என்பதும் இவர் அவ்வப்போது பட்டிமன்றங்களில் சிறப்பாக பேசுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆர்ஜே விக்னேஷ்காந்துக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டு நிச்சயதார்த்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். மேலும் திருமண தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இந்த திருமண நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்ததாகவும் அவருடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டதாகவும் தெரிகிறது. இதனையடுத்து சக நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் ஆர்ஜே விக்னேஷ்க்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Previous articleமர்மமான முறையில் உயிரிழந்த 21 வயது நடிகை !
Next articleகனடாவில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த நபர் தொடர்பில் : பொலிசார் வெளியிட்ட முக்கிய தகவல்