கோதுமை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!

தினமும் கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும். மேலும் உடல் பலம் அதிகரிக்கும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும்.

கோதுமையில் புற்றுநோயைத் தடுக்கும் வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது. ஆகவே இதனை தவறாமல் கொஞ்சமாவது சாப்பிட்டு வாருங்கள்.

முதுகுவலி, மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு கோதுமையை வறுத்து பொடித்து, அதனுடன் தேன் சேர்த்து உட்கொள்ள கொடுக்க அந்த வலி குணமாகும்.

வயிற்றில் புளிப்புத்தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வருபவர்கள் கோதுமை ரவையை கஞ்சி செய்து குடித்தால் உடனே நிவாரணம் பெறலாம்.
கோதுமை மாவை அக்கிப்புண், நெருப்பு பட்ட இடம், மேல் தோல் உரிந்துபோன இடம் ஆகியவற்றில் தூவினாலும் அல்லது வெண்ணெய் கலந்து பூசினாலும் எரிச்சல் தணியும்.

கோதுமை மாவை களியாக செய்து கட்டிகளுக்கு வைத்து கட்ட அவை சீக்கிரம் குணமாகும். வியர்க்குருவால் அவதிப்படுபவர்கள் கோதுமை மாவை புளித்த காடி நீரில் கலந்து பூசிவர அவை விரைவில் மறையும்.
கோதுமையை முந்தைய நாளே நீரில் ஊற வைத்து, காலையில் அடித்து பசையாக்கி, அதை மெல்லிய துணியில் இட்டு வடிகட்டி பிழிந்து வருகின்ற பால் கோதுமைப் பாலாகும்.

இந்த பாலை கப நோயாளிகள் பருக நல்ல பலன் கிடைக்கும். ரொட்டி கோதுமை மற்றும் மக்ரோனி கோதுமையைத் தவிர மற்றும் ஒரு கோதுமை வகைதான் சம்பா கோதுமை.
சம்பா கோதுமையைச் சாப்பிடும் போது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு, சர்க்கரை அளவு கணிசமாகக் குறைகிறது. மேலும் மொத்த கொழுப்புச் சத்து அளவு மற்றும் டிரை கிளைசி ரைட்ஸ் அளவும் கணிசமாக குறைகிறது.

Previous articleஇன்றைய ராசிபலன் 15/05/2022
Next articleகாலை உணவு எத்துக்கொள்ளாமல் விட்டால் வரும் பாதிப்பு – மருததுவரக்ள விடுத்துள்ள எச்சரிக்கை