யாழில் அங்கஜனை அவதூராக பேசிய விஜய் ரசிகர் மன்றத்தில் தலைவர் கைது

சுழிபுரத்தை சேர்ந்த 33 வயதான இளைஞரே விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நகரில் தொலைபேசி வர்த்தக நிலையமொன்றை நடத்தி வரும் இந்த இளைஞன், யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் விஜய் ரசிகர் மன்றத்தில் தலைவர் என்றும் தெரிய வருகிறது.

அந்த இளைஞன் நேற்று பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் மது போதையில் இருந்ததாக தெரிய வருகிறது.

வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக அங்கஜன் இராமநாதன் நீண்டகாலமாக ஏமாற்றிய விரக்தியில் அலுவலக பெயர்ப்பலகைக்கு தீமூட்டியதாக நேற்று வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

எனினும், இன்று காலையில் அவர் முரண்பாட்ட வாக்குமூலத்தை வழங்கினார். மதுபோதையில் சென்றதாகவும், நாடு இருக்கும் நிலைமையில் அங்கஜன் இராமநாதனின் படத்தை கண்ட போது எரிச்சல் வந்ததாகவும், அதனால் தீ வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 10ஆம் திகதி இரவு சண்டிலிப்பாயிலுள்ள அங்கஜன் இராமநாதனின் அலுவலகத்தை பிரதேச மக்கள் எரித்தழித்ததாக இணையத்தளங்களில் செய்தி பரவியிருந்தது. சம்பவ இடத்திற்கு பொலிசார் சென்ற போது, பெயர்ப்பலகையில் மாத்திரம் சிறிய சேதம் ஏற்பட்டிருந்தது.

யாரோ ஒருவர் அலுவலக பெயர்ப்பலகைக்கு தீமூட்டி புகைப்படம் எடுத்து விட்டு தப்பியோடியுள்ளதும், அந்த தீ உடனடியாக அணைந்துள்ளது என ஊகித்த பொலிசார், இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணைகளின் அடிப்படையில், சுழிபுரத்தை சேர்ந்த 33 வயதான இளைஞன் நேற்று கைது செய்யப்பட்டர்.

அவர் யாழ் நகரில் தொலைபேசி வர்த்தக நிலையமொன்றை நடத்தி வருகிறார். அத்துடன், யாழ் மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவராகவும் உள்ளார். இந்தகுழுவினர், விஜயின் திரைப்படங்கள் வெளியாகும் சமயத்தில், நகரிலுள்ள தியேட்டர்களில் விஜயின் கட்அவுட் வைத்து பாலாபிசேகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

அங்ஜனின் அலுவலகத்தில் தகரத்தால் அமைக்கப்பட்ட பெயர்ப்பலகைக்கே மதுபோதையில் தீ மூட்ட முயன்றுள்ளார்.

கைதானவர் இன்று யாழ் நீதிவான் நிதிமன்றத்தில் முற்படத்தப்பட்டார். அவரை பிணையில் விடுவித்த நீதவான், வழக்கை ஓகஸ்ட் 5ஆம் திகதிக்கு ஒததிவைத்தார்.

Previous articleஎரிபொருள் இன்மையால் தாய்க்கும் மகளுக்கும் ஏற்கபட்ட பரிதாப நிலை
Next articleமீண்டும் நாடளவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டது ஊரடங்குச்சட்டம்!