மீண்டும் நாடளவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டது ஊரடங்குச்சட்டம்!


நாட்டில் இன்றைய தினம் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி இன்று இரவு எட்டு மணி முதல் நாளை காலை ஐந்து மணி வரையில் ஊரடங்கு நடைமுறையில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கடந்த 9ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து அண்மைய சில நாட்களாக இரவு வேளைகளில் மாத்திரம் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் நாடளவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டது ஊரடங்குச்சட்டம்!
Previous articleயாழில் அங்கஜனை அவதூராக பேசிய விஜய் ரசிகர் மன்றத்தில் தலைவர் கைது
Next articleசர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவாகிய தமிழ் மாணவன்