க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களின் நலன் கருதி மின்சாரசபை மின்வெட்டுதொடர்பில் எடுத்த முக்கிய தீர்மாணம்

இலங்கையில் மின்சாரம் தடைப்படும் நேரத்தை மாற்ற பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மாதம் 22, 29 ஆகிய தேதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டது.

22ஆம் திகதி முதல் ஜூன் 1ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு மாலை 6.30 மணிக்குப் பின்னர் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும், நண்பகல் முதல் மாலை 6.30 மணி வரை ஒரு மணித்தியாலம் 45 நிமிடம் அல்லது இரண்டு மணித்தியாலம் 15 நிமிடங்கள் மின் தடை அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Previous articleபுத்தளத்தில் தீக்காயங்களுக்கு உள்ளான வயோதிபப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Next articleயாழில் கடும் காற்றினால் ஒருவர் உயிரிழப்பு 10 பேர் பாதிப்பு!