கிளிநொச்சியில் மாணவி ஒருவருக்கு ஏற்பட்ட விபரீதம்!

கிளிநொச்சி-பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளாலிப் பகுதியில் மர்மப் பொருள் ஒன்று வெடித்ததில் மாணவி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

கிளாலி பாடசாலைக்கு அருகில் உள்ள காணி ஒன்றினை தாயாருடன் இணைந்து துப்புரவு செய்தபோதே குறித்த அனர்த்தம் இடம்பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த மாணவிக்கு 16 வயது எனவும், நாளை சாதாரணதர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவி எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த மாணவி யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஇன்றைய ராசிபலன் 23/05/2022
Next articleயாழில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்