பொருளாதார சிக்கலினால் இலங்கை மாணவர்களை ஏற்றுக்கொள்ள தயங்கும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள்

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் இலங்கை மாணவர்களை ஏற்றுக் கொள்ளத் தயக்கம் காட்டப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் இங்கிலாந்தின் ஹட்டர்ஸ்பீல்ட் பல்கலைக்கழகத்துக்கு கற்கைநெறியொன்றுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் விண்ணப்பங்கள் அடுத்த தடவை உள்வாங்கப்படுவது வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக வௌிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் தங்கள் கற்கை நெறிக் கட்டணங்களைச் செலுத்துவதில் சிரமம் மற்றும் நெருக்கடிகளை எதிர்கொள்வதன் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடி இதே நிலையில் தொடர்ந்தால் வௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் இனி மேல் இலங்கை மாணவர்கள் அனுமதிக்கப்படும் நிலை கடும் வீழ்ச்சியை எதிர்நோக்கும் என்று குறிப்பிடப்படுகின்றது.

Previous articleயாழில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Next articleயாழிற்கு 75 ஆயிரம் இந்திய நிவாரண பொதிகள் ஒதுக்கீடு