யாழில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் அரசாங்க அதிபர் வெளியிட்ட தகவல்!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இந்த நிலையில் யாழில் தற்போதைய எரிபொருள் விநியோக நடவடிக்கை தொடர்பில், யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் (25-05-2022) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் கருத்து தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த 2ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் ஒக்டேன் – 92 பெற்றோல் 16 இலட்சத்து 10ஆயிரத்து 400 லீட்டர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இக் கால பகுதியில் டீசல் 8 இலட்சத்து 81 ஆயிரத்து 100 லீட்டரும் மண்ணெண்ணெய் 4 இலட்சத்து 48 ஆயிரத்து 800 லீட்டரும் சூப்பர் டீசல் ஒரு இலட்சத்து 25 ஆயிரத்து 400 லீட்டரும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

பெற்றோல் ஒக்டேன் 95 அக் கால பகுதியில் விநியோகிக்கப்படவில்லை. அதேவேளை 14ஆம் திகதிக்கு பின்னர் மண்ணெணெய் விநியோகத்திற்கு கிடைக்கப்பெறவில்லை.

அத்துடன் பெற்றோல் கடந்த 14ஆம் திகதி அதிக பட்சமாக ஒரே நாளில் 2 இலட்சத்து 11 ஆயிரத்து 200 லீட்டர் விநியோகிக்கப்பட்டுள்ளதுடன் , 20ஆம் திகதியும் ஒரு இலட்சத்து 65 லீட்டர் பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Previous articleபொருளாதார சிக்கலினால் பலர் வேலையை இழக்கும் அபாயம்! கைவிரித்த மத்திய வங்கியின் ஆளுநர்
Next articleஅரச ஊழியர்களின் சம்பளம் குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு