நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் குளத்தில் மூழ்கி பலி

மஹியங்கனை தம்பராவ குளத்தில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

ஹபரவெவ, கிரிமெடில்ல பிரதேசத்தில் வசிக்கும் இவர்கள் நேற்று பிற்பகல் தம்பராவ குளத்தில் குளிப்பதற்குச் சென்றுள்ளனர்.

குளிக்கச் சென்ற மூவரும் பல மணிநேரமாகியும் வீடு திரும்பாததால் பிரதேச மக்கள் குறித்த இடத்தில் தேடுதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது நீரில் மூழ்கி உயிரிழந்த மூவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. உயிரிழந்தவர்கள் 45 வயதுடைய தந்தையும் அவரது 10 மற்றும் 15 வயதுடைய மகன்களும் ஆவார்கள்.

அவர்களின் சடலங்கள் மஹியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஅரச ஊழியர்களின் சம்பளம் குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
Next articleயாழில் ஆண்களுடன் பெண் குரலில் பேசி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ஆண் கைது