யாழில் மீனவர்களின் கோரிக்கைளுக்கு அமைவாக எரிபொருள் வழங்கிய இந்தியா

யாழ். தீவக மீனவர்களின் கோரிக்கைக்கு அமைவாக சுமார் 15 ஆயிரம் லீற்றர் மண்ணெண்ணை இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியுள்ளார்.

மாவட்டச் செயலகத்தில் இன்று ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

யாழ்.தீவக மீனவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக சுமார் 15 ஆயிரம் லீற்றர் மண்ணெண்ணை இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது. அவை கொழும்பை வந்தடைந்துள்ளது.

மிக விரையில் யாழ்ப்பாணம் எடுத்துவரப்பட்டு தீவக மீனவர்களுக்கு மட்டும் வழங்கப்படவுள்ளது. நயினாதீவு, எழுவைதீவு, நெடுந்தீவு, அனலைதீவு உள்ளிட்ட தீவு பகுதி மீனவர்கள் 705 பேருந்து அது பகிரப்படும்.

அந்த பணியை மீன்பிடி திணைக்களம், பிரதேச செயலகம் மற்றும் மீன்பிடி சங்கங்கள் மேற்கொள்ளவுள்ளன என மாவட்ட செயலர் மேலும் கூறினார்.

Previous articleயாழில் 20 நாளில் விற்கப்பட்ட 16 இலட்சம் லீட்டர் பெற்றோல்
Next articleயாழில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையனின் மனைவி கைது!