வவுனியாவில் 14 வயது சிறுமியை சீரழித்த நபருக்கு நீதிமன்றம் வழங்கிய கடுமையான தண்டனை

வவுனியாவில் தாய்மாமன் மருமகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து (25) தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த (17.05.2017) அன்று வவுனியாவில் வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை தாயின் சகோதரர் (மாமா) மது போதையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், அதன் பின்னர் தான் கற்பமாகி கருச்சிதைவு ஏற்பட்டதாகவும் மன்றில் குறித்த சிறுமி சாட்சியம் அளித்துள்ளார்.

இச் சாட்சியத்தை ஒப்புதல் அளிக்கும் விதமாக வைத்திய கலாநிதி ஒருவரும் மன்றில் சாட்சியம் அளித்துள்ளார்.

குறித்த குற்றவாளிக்கு 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் 5 லட்சம் ரூபா நஷ்டஈடும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதுடன் தவறும் பட்சத்தில் இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையும்10 ஆயிரம் ரூபா தண்டப்பணமும், கட்டத்தவறும் பட்சத்தில் 3 மாத சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி மா. இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

Previous articleதாய் இறந்ததை மறைத்து மகளை தேர்வுக்கு அனுப்பிய தந்தை : பின் நடந்த சோகம்
Next articleஇன்று முதல் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு : சதொச வெளியிட்ட அறிவிப்பு