இராணுவ தளபதி பதவியில் இருந்து விலகவுள்ள சவேந்திர சில்வா

சமகால இராணுவ தளபதி சவேந்திர சில்வா எதிர்வரும் 31ஆம் திகதி பதவி விலகவுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய இராணுவ தளபதியாக, தற்போதைய படைத் தளபதி மேஜர் ஜெனரல் விகும் லியனகே நியமிக்கப்படவுள்ளார்.

எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி புதிய இராணுவ தளபதி தனது பதவியை பொறுப்பேற்கவுள்ளார்.

ஜெனரல் சவேந்திர சில்வா எதிர்வரும் மே 31ஆம் திகதி இராணுவத் தளபதி பதவியை விட்டு விலகுவதாக இராணுவ ஆய்வாளர் அரூஸ் கடந்த 15ஆம் திகதி உறுதிப்படுத்திய சம்பவம் தற்போது உண்மையாகவே நடந்துள்ளது.

Previous articleஎரிபொருள் இன்மையால் வைத்தியர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்
Next articleயாழில் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்த 05 வயது சிறுமி