யாழில் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்த 05 வயது சிறுமி

யாழில் டெங்கு காய்ச்சல் காரணமாக 05 வயது சிறுமி ஒருவர் பலியாகியுள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பமானது யாழ் – உடுவிலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியைச் சேர்நத பரசுதன் யோயிதா (வயது 5) எனும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த 23ம் திகதி முதல் சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நேற்று கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பெற்றோர் சிறுமியை இணுவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தனியார் மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்து மருத்துவரின் அறிவுறைக்கேற்ப சிறுமியை பெற்றோர் வீட்டிற்கு கூட்டிச் சென்றுள்ளனர்.

எனினும் அன்றைய தினம் சிறுமிக்கு காய்ச்சலும், வாந்தியும் அதிகரித்ததால் மீண்டும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவரது உடல்நிலையைக் கருத்திற்கொண்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதனால் சிகிச்சைபலனின்றி சிறுமி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

Previous articleஇராணுவ தளபதி பதவியில் இருந்து விலகவுள்ள சவேந்திர சில்வா
Next articleயாழில் மர்மமான முறையில் இறந்த இரு பெண்களின் சடலங்கள் மீட்பு!