கோழியின் விலை ஆயிரத்தை தாண்டியது : முட்டை ஒன்றின் விலை 50

எதிர்காலத்தில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாகவும் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1200 ரூபாவாகவும் அதிகரிக்கலாம் என அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளனம் தெரிவிக்கின்றது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அதன் தலைவர் அஜித் குணசேகர இதனை குறிப்பிட்டார்.

தனது தொழில்துறைக்கு தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர்கள் கிடைக்காத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, உரம் கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள் எரிபொருள் நெருக்கடி காரணமாக விவசாயத்தை தொடர முடியாமல் தவித்து வருகின்றனர்.

Previous articleமது போதையில் மாமியாரை தாக்கிய மருமகன் கைது
Next articleயாழில் கொள்ளையில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட இருவர் கைது