மாத்தறை பகுதியில் 06 வயது உயிரை பறித்த சென்ற ரயில்!

கொஸ்கொடவை அண்மித்த பியகம புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பாரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (28-05-2022) காலை இடம்பெற்றுள்ளது.

மருதானையில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயிலில் மோதியே குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரயில் கடவைக்கு அருகில் சென்று கொண்டிருந்த இரு சிறுமிகளில் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பியகம, ஹேகல்ல பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் பலபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கொஸ்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleபொருளாதார சிக்கலினால் ஓள்வூதியம் வழங்குவதில் சிக்கல்
Next articleநாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க