கொழும்பில் மீண்டும் தீவிரமடைந்த போராட்டம்

தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக ஸ்திரமின்மைக்கு தீர்வு காணுமாறு கோரி மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டாளர்கள் குழுவினரின் போராட்டப் பேரணியைக் கலைக்க, கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விஹார மகாதேவி பூங்காவுக்கு அருகாமையில் இருந்து ஆரம்பமான போராட்டப் பேரணி உலக வர்த்த மையத்துக்கு முன்னால் சென்றடைந்தது.

அதன் பின்னர், அவ்விடத்தில் எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

எனினும், பொலிஸ் தடுப்பைப் பிடித்துக்கொண்ட மாணவர்கள் இடத்தை விட்டு அசையாமல் நின்று எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மேலும் நீர்த்தாரை கொண்டு அவர்களை கலைப்பதற்கு பிரயத்தனங்களை மேற்கொண்ட பொலிஸார், கண்ணீர்ப் புகைப் பிரயோகம் நடத்துகின்றனர்.

Previous articleநாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க
Next articleசிறுமியை கொலைசெய்ததற்கான காரணத்தை வெளியிட்ட சந்தேக நபர்