காரில் கடத்த முற்பட்டவர்களிடம் இருந்து தோழியை காப்பாற்றிய சிறுமி!

தோப்பூர் சின்னப் பள்ளிவாயலுக்கு அருகில் உள்ள வீதியில் வைத்து ஆட்டோ காரில் வந்த சிலர் சிறுமி ஒருவரை கடத்த முற்பட்டபோது அம் முயற்சி படுதோல்வியில் முடிவடைந்துள்ளது.

இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (30-05-2022) மாலை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

இரண்டு சிறுமிகள் வீதியால் வந்து கொண்டிருந்தபோது ஆட்டோ காரில் வந்தவர்கள் சிறுமியொருவரின் கையைப்பிடித்து இழுத்து காரில் ஏற்றுவதற்கு முற்பட்டபோது மற்றைய சிறுமி தனது நண்பியை பிடித்து இழுத்து காப்பாற்றியுள்ளார்.காப்பாற்றப்பட்ட சிறுமியின் கையில் நகக் கீரல் ஒன்றும் காணப்படுகின்றது.

தனது நண்பியை காப்பாற்றிய சிறுமியின் புகைப்படம் வெளியான நிலையில் முகநூலில் குறித்த சிறுமிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

மேலும் வீட்டில் இருக்கும் உங்கள் பிள்ளைகளை வெளியில் அனுப்பும்போது பெற்றோர்கள் கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

Previous articleஅவுஸ்திரேலியா அழகிப் போட்டியில் இலங்கை நடிகை வெற்றி
Next articleஉலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த இலங்கை இரண்டரை வயது சிறுமி!