நைஜீரியாவில் குரங்கம்மை தொற்றால் ஒருவர் பலி

குரங்கம்மை தொற்றின் முதல் மரணம் நைஜீரியாவில் பதிவாகியுள்ளது.

நைஜீரியாவில் குரங்கம்மை தொற்றால் 66 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், 40 வயதுடைய ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

காங்கோவில் வசிக்கும் சிலர் வன பகுதிக்கு சென்று இறந்த குரங்கு, வௌவால் மற்றும் எலிகளின் உடல்களை உணவாக உட்கொள்வதினால் குரங்கு அம்மை தொற்று பரவியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குரங்கு அம்மை தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளவர்கள் சுகாதார மையத்தில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

நைஜீரியாவில் கடந்த 2017ம் ஆண்டு செப்டெம்பரில் இருந்து குரங்கு அம்மை தொற்று பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை எனவும், எனினும், 22 மாகாணங்களில் 247 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.