வவுனியாவில் சட்டவிரோதமாக வீட்டில் வைத்து பெட்ரோல் விற்பனை செய்த நபர் கைது

வவுனியா பூவரசன்குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வீட்டில் வைத்து பெட்ரோல் விற்பனை செய்த நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
வவுனியா பூவரசன்குளம் பொலிஸ் பிரிவில் சட்ட விரோதமான முறையில் வீட்டில் வைத்து பெட்ரோல் விற்பனை செய்து வருவதாக முறைப்பாட்டு கிடைத்துள்ளது.

இதனையடுத்து, பூவரசங்குளம் பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக பெட்ரோல் விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்த சந்தேக நபரிடமிருந்து, பொலிசார் பெட்ரோல் என்பனவற்றை கைப்பற்றியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Previous articleநைஜீரியாவில் குரங்கம்மை தொற்றால் ஒருவர் பலி
Next articleகுளிர்பானம் குடித்து பானிபூரி சாப்பிட்ட சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்..!