குளிர்பானம் குடித்து பானிபூரி சாப்பிட்ட சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்..!

சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி திவ்யா, இவர்களுக்கு யுவராஜ்,வசந்தகுமார், ஈஸ்வரன் என மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர் இதில் வசந்தகுமார் துரைப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் சகோதரர்கள் மூன்று பேரும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த கடை ஒன்றில் வசந்தகுமார் சாக்லேட் மில்க் வாங்கி குடித்துள்ளார். பிறகு உடனே சாலையோரம் இருந்த கடையில் பானிபூரியும் வாங்கி சாப்பிட்டுள்ளார்.

பிறகு வீட்டிற்குச் செல்லும்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டு சிறுவன் கீழே விழுந்துள்ளான். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சிறுவனை மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு வசந்தகுமாரைச் சோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுவன் குளிர்பானம் வாங்கி குடித்த கடையிலும், பானிபூரி கடையிலும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்

கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு கானத்தூரில் விளையாடிய இளைஞர் குளிர்பானத்துடன் சிப்ஸ் சாப்பிட்ட மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அடுத்து தற்போது, மற்றொரு சிறுவன் குளிர்பானம் காரணமாக உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleவவுனியாவில் சட்டவிரோதமாக வீட்டில் வைத்து பெட்ரோல் விற்பனை செய்த நபர் கைது
Next articleகணவனை கொன்று புதைத்து விட்டு காணவில்லை என நடித்த பெண்