கணவனை கொன்று புதைத்து விட்டு காணவில்லை என நடித்த பெண்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி, அடுத்த எஸ்,புதுக்குப்பம் கிராமத்தில் வசித்து வரும் ராஜசேகர். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு திருமணமாகி 18 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். குடும்பத்துடன் நிலத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் 9 மாதங்களுக்கு முன் கணவர், ராஜசேகர் திடீர் மாயமானார். இதற்கிடையில் விஜயலட்சுமியின் சகோதரர் சிவக்குமார் வீட்டிற்கு வரும்போதெல்லாம் வரும்பொழுது மாமா எங்கே என்று கேட்கும் பொழுதெல்லாம் வெளியூர் சென்று இருப்பதாக பல முறை கூறி வந்ததாகவும் இதில் சந்தேகம் அடைந்த சிவகுமார் விஜயலட்சுமியை மிரட்டி கெட்ட பொழுது விஜயலட்சுமி கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதில் அதே பகுதியை சேர்ந்த மோகன் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகவும், இதனை அறிந்த ராஜசேகர் பலமுறை விஜயலட்சுமி மோகனை கண்டித்துதாவும் இதில் ஆத்திரமடைந்த வியலட்சுமி ராஜசேகரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து மோகனிடம் கூறியதன் பேரில் இருவரும் சேர்ந்து ராஜசேகரை கொலை செய்து வாழைத் தோப்பில் புதைத்து வைத்திருப்பதாக விஜயலட்சுமி கூறினார்.

உடனடியாக நடுவீரப்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயலட்சுமி கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து ராஜசேகரை கொலை செய்து வாழைத் தோப்பில் புதைத்து வைத்த இடத்தை விஜயலட்சுமி போலீசாரிடம் காண்பித்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அதைத்தொடர்ந்து போலீசார் ராஜசேகர் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

Previous articleகுளிர்பானம் குடித்து பானிபூரி சாப்பிட்ட சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்..!
Next articleவளர்ப்பு மகளை சீரழித்த தந்தையை நடுரோட்டில் புரட்டியெடுத்த பொதுமக்கள்!